மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

 

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 120 பேர் லேசான காயங்களுடனும் 20 பேர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது. அதாவது விமான விபத்தில் இருந்து தப்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

அதனைத்தொடர்ந்து விமான விபத்தை நேரில் ஆய்வு செய்த மலப்புரம் எஸ்.பிக்கு கொரோனா உறுதியானது. அதனால் விமான விபத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட 600 பணியாளர்கள் தங்களை தனிமைபடுத்திக் கொண்டனர். இந்த நிலையில் மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதே போல துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் என 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அம்மாவட்ட எஸ்.பி மூலம் இவர்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.