திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்தது. அதில் சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 1,438 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதநாள் அவர் வானகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கிய அணி இணைச்செயலாளரான வி.பி.கலைராஜன் தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2...

செவ்வாய் கிரகத்தின் விசித்திரங்கள் – நாசா வெளியிட்டிருக்கும் போட்டோக்கள்

விண்வெளி என்றைக்கும் ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது தான். மனிதர்கள், இயற்கையை ரசித்துகொண்டு மட்டுமே இல்லை. அதன் ரகசியம் அறிய ஏராளமான ஆய்வுகளும் செய்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது... அங்கு காற்று இருக்கிறதா... பூமி...

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை...

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...
Do NOT follow this link or you will be banned from the site!