‘பிசிசிஐ’ மருத்துவக் குழுவின் உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

 

‘பிசிசிஐ’ மருத்துவக் குழுவின் உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

துபாயில் இருக்கும் பிசிசிஐ மருத்துவ அணியின் உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஐபிஎல் போட்டி வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சத்தால் ஐபிஎல் போட்டி நடக்குமா என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டதால், போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகள் கடந்த 21 ஆம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றது. அதனுள் சிஎஸ்கே அணியும் ஒன்று.

‘பிசிசிஐ’ மருத்துவக் குழுவின் உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

வீரர்கள் ஐக்கிய அமீரகம் சென்றவுடன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆனால் ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பதால், அவர்கள் மறுபரிசோதனைக்கு பின்னர் பயிற்சிக்கு செல்வார்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

‘பிசிசிஐ’ மருத்துவக் குழுவின் உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவ அணியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதே போல, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவ அணியின் உறுப்பினர் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்ற போது அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.