#BREAKING: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

 

#BREAKING: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,49,553 லிருந்து 8,78, 254 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5, 53 ,471பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் 28 ,701 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 500 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் பரவி வருகிறது.

#BREAKING: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,235 ஆக உள்ள நிலையில், 14,393 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், இதுவரை அம்மாநிலத்தில் 309 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாராபட்சமின்றி கொரோனா பரவி வரும் இந்த நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அம்ஜத் பாஜாவின் மனைவி மற்றும் மகள் உட்பட அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதால் அவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.