மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது. அதனைத் தொடர்ந்து பரமக்குடி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா உறுதியானது.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அரச்சுணனுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது மகள், மருமகள் மற்றும் பேத்தி மதுரை சென்று வந்ததால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவி, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்து எம்.எல்.ஏ அரச்சுணனுக்கும் தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...