தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். இதனிடையே நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி என பல பணிகளில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதுவரை திமுக எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்கள் பலருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இன்று காலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏவான மாணிக்கத்திற்கு கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பரமேஸ்வரி முருகனின் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.