‘அதிமுக வேட்பாளர்’ ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதி!

 

‘அதிமுக வேட்பாளர்’ ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனல்பறக்க நடந்து கொண்டிருந்த போது, கொரோனா வைரஸ் பன்மடங்கு அதிகரித்தது. மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் கூட்டம் கூட்டமாக பிரச்சாரத்தில் பங்கேற்றதே இதற்கு முக்கிய காரணம். சொல்லப் போனால்… அரசியல் கட்சியினரே முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை.

‘அதிமுக வேட்பாளர்’ ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதி!

இதனால் அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தேர்தல் நேரத்தில் அவர்களால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியாமல் போனது. வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியலில் முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

‘அதிமுக வேட்பாளர்’ ஜெயக்குமாருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில், பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 10 நாட்கள் தனிமையில் இருந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பிரச்சாரத்திலும் தேர்தல் நேரத்திலும் அவருடன் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.