நடிகர் அதர்வா போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

நடிகர் அதர்வா போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. நடிகர்கள் சோனு சூட், பவன் கல்யாண், டொவினோ தாமஸ், செந்தில், அக்சய் குமார், அமீர் கான், மாதவன் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியானது.

நடிகர் அதர்வா போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதே போல நடிகைகள் நிவேதா தாமஸ், ராதிகா, நக்மா, ஆலியா பட், கத்ரினா கைஃப் உள்ளிட்டோருக்கும் கொரோனா உறுதியாகி இருந்தது. படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதன் மூலமாக இவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், பெரும்பாலானோர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். ஒரு சிலர் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

நடிகர் அதர்வா போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் இமைக்கா நொடிகள், பாணா காத்தாடி, சண்டிவீரன், பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். விரைவில் குணமடைந்து பணியை தொடங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதர்வாவுக்கு கொரோனா உறுதியானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நீங்கள் குணமடைந்து விடுவீர்கள் என அதர்வாவுக்கு ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.