புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி!

 

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் என்றும் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செயல்பட வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது வரை அந்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி!

இருப்பினும் இன்று இதுவரை இல்லாத அளவில் 85 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.