இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவருக்கு கொரோனா… சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் பெண்கள், கணவனை இழந்தவர்கள் போன்ற பெண்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்றுள்ளனர்.

மேலும் இவர்களின் ஆபாச படங்களை எடுத்து மிரட்டி வந்த இந்த கும்பல் இந்த பெண்களை வைத்து சில தொழிலதிபர்களையும் வலையில் வீழ்த்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக எழுந்த வழக்கில் இன்று காலை பிரதீப், சிவா மற்றும் லோகநாதன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 25 பேரை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close