‘8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா’.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்!

 

‘8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா’.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்!

தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியிருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டிருப்பினும், பாதிப்பு குறைய வில்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், உயிர் பிழைத்துக் கொள்ளச் சென்னையிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மூலமாக கொரோனா அதிகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொடிய நோயான கொரோனாவால் காவலர்களும், மருத்துவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் பாதிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

‘8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா’.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்!

இந்த நிலையில் விருதுநகரில் 8 கர்ப்பிணிகள், 4 செவிலியர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்த 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா உறுதியானதால், அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.