‘புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி’.. முதல்வருக்கு கொரோனா இல்லை!

 

‘புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி’.. முதல்வருக்கு கொரோனா இல்லை!

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்து கொண்டதால் புதுச்சேரி பேரவை கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் கூட்டத்தொடர் நடக்க முடிவு செய்யப்பட்டு அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

‘புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி’.. முதல்வருக்கு கொரோனா இல்லை!

அதன் பின்னர், கடந்த 25 ஆம் தேதி சட்ட பேரவை கூட்டம் வழக்கமாக நடைபெறும் மைய மண்டபத்திலிருந்து தற்காலிகமாக வளாகத்தின் திறந்த வெளியில் நடந்து முடிந்தது. கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டபேரவையில் கலந்து கொண்ட புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமை படுத்திக் கொள்ளுமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதுச்சேரி முதல்வர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.