திருப்பத்தூர் கிளைச்சிறையில் 26 கைதிகளுக்கு கொரோனா.. அச்சத்தில் பிற கைதிகள்!

 

திருப்பத்தூர் கிளைச்சிறையில் 26 கைதிகளுக்கு கொரோனா.. அச்சத்தில் பிற கைதிகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கையாளப்பட்டும் பாதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. இருப்பினும் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூர் கிளைச்சிறையில் 26 கைதிகளுக்கு கொரோனா.. அச்சத்தில் பிற கைதிகள்!

இதனிடையே சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் கொரோனா பரவியது. குறிப்பாக புழல் சிறையில் இருந்து பிற மாவட்டங்களின் சிறைக்கு சென்ற கைதிகள் மூலமாக, சிறைத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கைதிகளை வெளியே கொண்டு வந்து சிகிச்சை அளிக்கக்கூடிய சூழலை தவிர்ப்பதற்காகவே, புழல் சிறையில் தற்போது கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 40 படுக்கைகள் கொண்ட அந்த வார்டில், பல கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் கிளைச்சிறையில் இருக்கும் 26 கைதிகளுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைதிகள் மூலமாக, திருப்பத்தூர் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா உறுதியான கைதிகள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் மூலமாக தங்களுக்கும் பரவிடுமோ என்ற அச்சத்தில் பிற கைதிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.