கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

 

கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில், கோவாக்சின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட 14 நாட்கள் பரிசோதனை வெற்றி அடைந்ததையடுத்து இன்று எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த கோவாக்சின் பரிசோதனை வெற்றியில் முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலருக்கு கொரோனா பரவி விட்டது. அதுமட்டுமில்லாமல் தமிழக ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு படை வீரர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியதால் மூலமாக, ஆளுநருக்கும் பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் கடலோர பாதுகாப்பு படை குடியிருப்பில் இருக்கும் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.