நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா!

 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியா பல்வேறு நெருக்கடியை சந்தித்து வரும் இந்த சூழலில், இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் விடுமுறையின்றி நடைபெற உள்ள கூட்டத்தொடரில், பல்வேறு சட்டத்திருத்த மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா!

இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், கொரோனா பணியை மேற்கொண்டு வரும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து திமுக எம்பி டிஆர் பாலு, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சிபிஎஸ்இ வழியில் நடத்தப்படும் இந்த தேர்வால் தற்கொலை அதிகமாக நடப்பதாகவும் கூறினார். கேள்வி நேரம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், டிஆர் பாலுவின் கேள்வியை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை யொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் மீனாட்சி லேக்கி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் நாளை கூட்டத்தொடரில் அவர்கள் 17 பேரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனல் கூறப்படுகிறது. பாஜகவில் அதிகபட்சமாக 12 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.