10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா உறுதி!

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா உறுதி!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா உறுதி!

ஏற்கனவே தேர்வுத்துறையில் மூன்று அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பரவியதால், அவர் தருமபுரியில் இருக்கும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் இந்த சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா பரவியுள்ளதால் தேர்வுப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.