துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற 58 பேருக்கு கொரோனா உறுதி!

 

துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற 58 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்துக்குள்ளே செல்ல பாஸ் வேண்டாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் கட்டாயம் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே துக்க நிகழ்ச்சிகள், திருமணம், உடல்நலக்குறைவுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமண, துக்க நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அங்கு கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.

துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற 58 பேருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. கொளத்தூர் பண்ணவாடியில் கடந்த 21 ஆம் தேதி செல்வம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்குச் சென்ற 58 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.