சபரிமலைக்கு செல்ல ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் – தேவசம் போர்டு அமைச்சர்

 

சபரிமலைக்கு செல்ல ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் – தேவசம் போர்டு அமைச்சர்

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் பொதுமக்களுக்காக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது.

சபரிமலைக்கு செல்ல ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் – தேவசம் போர்டு அமைச்சர்

அந்த வகையில், கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் என அனைத்தும் 9 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் ”வெர்ச்சுவர் க்யூ மேனேஜ்மெண்ட்” (VQM) சிஸ்டம் மூலம் முன்பதிவு செய்த 50 பக்தர்கள் வீதம் தரிசிக்க அனுமதித்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் எனவும் வெளி மாநில பக்தர்களும் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள தேவசம் போர்டு அமைச்சர், சபரி மலைக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் கட்டாயம் ‘கொரோனா இல்லை’ என்னும் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பையில் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு 50 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.