அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா… கல்லூரிகளை மூட அரசு முடிவு?

 

அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா… கல்லூரிகளை மூட அரசு முடிவு?

கடந்த வருடம் முழுவதும் கொரோனாவின் தீவிரம் குறையாமல் இருந்ததால் இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடம் படித்துவந்தனர். இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா… கல்லூரிகளை மூட அரசு முடிவு?

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் ஆங்காங்கே சில பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இச்சூழலில் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு கூடுதலாக 500 பாதிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன. நேற்று கிட்டத்தட்ட 1,500 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களான மக்கள் நீதி மய்யம் சந்தோஷ் பாபு, எல்கே சுதீஷ் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.

அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா… கல்லூரிகளை மூட அரசு முடிவு?

இதையடுத்து நேற்று 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தற்போது கல்லூரி மாணவர்களுக்கும் வரிசையாக தொற்று பரவிவருகிறது. திருச்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதையடுத்து கல்லூரி இழுத்து மூடப்பட்டது. தற்போது திருப்பத்தூரில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கல்லூரிகளையும் மூட அரசு பரிசீலனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. சில தினங்களில் அறிவிப்பு வெளிவரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.