60 விநாடிக்கு மேல் நின்றால் கொரோனா பரவலாம்… சென்னை சிக்னல்களில் அதிரடி மாற்றம்!

 

60 விநாடிக்கு மேல் நின்றால் கொரோனா பரவலாம்… சென்னை சிக்னல்களில் அதிரடி மாற்றம்!

சென்னை போக்குவரத்து சிக்னல்களில் 60 விநாடிக்கு மேல் ஒருவர் நின்றால் கொரோனாவுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுவதையொட்டி பல்வேறு மாற்றங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் செய்து வருகின்றனர்.

60 விநாடிக்கு மேல் நின்றால் கொரோனா பரவலாம்… சென்னை சிக்னல்களில் அதிரடி மாற்றம்!கொரோனாத் தொற்று காரணமாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்கள், கடைகளுக்கு செல்வோர் கூட்டம் அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை என்றாலும் பைக்கில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பலரும் மாஸ்க் அணியாமல் வேறு செல்கின்றனர். இவர்கள் சிக்னல்களில் நிற்கும்போது கொரோனாவுக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

60 விநாடிக்கு மேல் நின்றால் கொரோனா பரவலாம்… சென்னை சிக்னல்களில் அதிரடி மாற்றம்!இதை கருத்தில் கொண்டு சிக்னலில் அதிகபட்சம் 60 விநாடிகள் மட்டும் நிற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்னல் உடனுக்குடன் விழுந்தது போல இருந்தாலும் கொரோனா வாய்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது. இன்று சோதனை முறையில் 10 சிக்னல்களில் அதிகபட்ச காத்திருப்பு நேரம் 60 விநாடிகள் என்று மாற்றி சோதனை செய்யப்பட்டது. பல சிரமங்கள் இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்காக அதை சமாளிக்கலாம் என்று போக்குவரத்து காவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் 60 விநாடி காத்திருப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.