‘சான்டா கிளாஸாக மாறிய யானைகள்’ – கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

‘சான்டா கிளாஸாக மாறிய யானைகள்’ – கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகளில் இரவு நேர ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது புதிய வகை கொரோனா பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இவ்வாறு பல சிக்கல் நீடிக்கும் நிலையிலும், நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சான்டா கிளாஸாக மாறிய யானைகள்’ – கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் சான்டா கிளோஸ் போல வேடம் அணிந்து 4 யானைகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு பொதுவாகவே யானை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் யானையைக் கொண்டே விழுப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி, யானைகளை சான்டா கிளோஸ் வேடம் அணிவித்து, தும்பிக்கையில் மாஸ்க்கை கொடுத்து பள்ளிகளுக்கு அழைத்து சென்று விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘சான்டா கிளாஸாக மாறிய யானைகள்’ – கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

யானைகள் குழந்தைகளுக்கு மாஸ்க் வழங்குவதன் மூலமாக, மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் மாணவர்களுக்கு எளிதில் புரியும். குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாம். யானைகளின் வருகை மாணவர்களை மிக்க மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.