மக்களை கவர்ந்த “கொரோனா அரக்கி” – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

மக்களை கவர்ந்த “கொரோனா அரக்கி” – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த காலக்கட்டத்தில், புதுச்சேரியிலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வந்தது. அம்மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், கடந்த ஒரு மாதமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், பண்டிகை காலம் நெருங்குவதால் கடைகளில் கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது.

மக்களை கவர்ந்த “கொரோனா அரக்கி” – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு கொரோனா விழுப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் கண்காட்சி நடக்கிறது. அதில், கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

மக்களை கவர்ந்த “கொரோனா அரக்கி” – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கண்காட்சி வரும் மக்களை வரவேற்கும் விதமாக வரையப்பட்டிருக்கும் கொரோனா அரக்கி ஓவியம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.