Home தமிழகம் வசிப்பது திருவள்ளூர் மாவட்டம்... குறை சொல்வது சென்னை மாநகராட்சியை... கொரோனா புகார் கூறிய பெண் பற்றி வெளியான உண்மை

வசிப்பது திருவள்ளூர் மாவட்டம்… குறை சொல்வது சென்னை மாநகராட்சியை… கொரோனா புகார் கூறிய பெண் பற்றி வெளியான உண்மை

வசிப்பது திருவள்ளூர் மாவட்டம்… குறை சொல்வது சென்னை மாநகராட்சியை… கொரோனா புகார் கூறிய பெண் பற்றி வெளியான உண்மை
தனக்கு கொரோனா நோய் இருப்பதாகவும் ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வீடியோ வெளியிட்ட பெண்மணியின் உண்மை வெளியானதால் மூக்குடைபட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரஜினிபிரியா என்ற பெண் தனக்கு கொரோனா உள்ளது என்றும், ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிக்டாக்கில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து பலரும் பீதியடையவே, அவரைப் பற்றி பலரும் தேடிவருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே வசிக்கிறேன் என்று கூறி ஒரு முதியவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி பிரியாவின் வீடியோவைப் பார்த்து பதறிவிட்டேன். எனக்கும் கொரோனா இருந்தது. இந்த வீடியோ தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது அவர்கள், ரஜினிபிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை செய்யும்போது தான் வசிக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டம் என்று கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டால் அவர்களுக்கு திருவள்ளூரில் தான் சிகிச்சை அளிக்கப்படும். அம்பத்தூர் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவர் கொடுத்த முகவரி படி அவருக்கு திருவள்ளூரில் சிகிச்சை அளிக்கப்படும் நிலை உள்ளது. சென்னை மாநகராட்சி பட்டியலில் அவர் பெயர் இல்லை. திருவள்ளூர் மாவட்ட பட்டியலில் பெயர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் திருவள்ளூர் செல் மறுத்துள்ளார்.
தற்போத ரஜினி பிரியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் ஐடிஐ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் சேர்த்துள்ளனர். எனக்குத் தெரிந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பான சேவை அளித்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் சென்னையில் 31 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். பிரச்னை என்ன என்று தெரிந்துகொள்ளாமல், சிலர் விளம்பரத்துக்காக இப்படி வீடியோ வெளியிடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இது கொரோனா போராளிகளை மனச்சோர்வு அடைய காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

http://


இவர் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. அரசுதான் விளக்கம் கொடுக்க வேண்டும். சாதாரண வீடியோதானே என்று தமிழக அரசு, சென்னை மாநகராட்சி அலட்சியமாக இருந்தால் அது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும், வேறு மாதிரியான தாக்கத்தை அது உருவாக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மின்சாரம் தாக்கி தனியார் வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி

கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே டிவி பார்க்க முயன்றபோது மின்சாரம் தாக்கி, தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பச்சிளங் குழந்தைகளை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற கும்பல் : வளைத்து பிடித்த போலீசார்!

மும்பையில் குழந்தைகளை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த 9 பேர், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் புதிய...

மதுரையில் அசத்தல் திருமணம்: டிஜிட்டல் முறையில் மொய் வசூல்

திருமணத்திற்கு மொய் பணம் கொடுப்பவர்களின் விபரங்களை காகித நோட்டில் எழுதும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. ஆனாலும் கால மாற்றத்திற்கு தகுந்தமாதிரி, டெபிட் கார்டு மூலமாகவும் மொய் பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

“நெட் பவுலராவே திரும்பி போய்டனும் தான் நினச்சேன்… இப்போ ரொம்பவே ஹேப்பியா இருக்கு ண்ணா” – நடராஜனின் ‘கூச்ச’ தமிழ்!

பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக நான்காவது டெஸ்டில் அவருக்குப் பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராகக் களமிறக்கப்பட்டார். ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுக போட்டிலேயே அசத்திய நடராஜன் மீது...
Do NOT follow this link or you will be banned from the site!