திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா?

 

திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா?

முதல்வரின் நேர்முக உதவியாளர் கொரோனா பாதிப்பில் இறந்துள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உதவியாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா?தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் சமீபத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

திண்டுக்கல் சீனிவாசன் உதவியாளருக்கு கொரோனா?இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி, காமராஜ் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.