அறிகுறியில்லாமல் கொரோனா பாசிட்டிவ் – சீனாவில் மீண்டும் கொரோனாவா?

 

அறிகுறியில்லாமல் கொரோனா பாசிட்டிவ் – சீனாவில் மீண்டும் கொரோனாவா?

2019 ஆம் ஆண்டின் டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து பல நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியது. இன்று உலகையே அச்சுறுத்தும் விதத்தில் கொரோனா பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 888 பேர். ரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 59 ஆயிரத்து 093 பேர்.

அறிகுறியில்லாமல் கொரோனா பாசிட்டிவ் – சீனாவில் மீண்டும் கொரோனாவா?

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 19 லட்சத்து 05 ஆயிரத்து 975 நபர்கள். சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது என்றாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

தற்போது சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஒருவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுக்க கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று பாசிட்டிவ் என கண்டறியப்பட்டது.

அறிகுறியில்லாமல் கொரோனா பாசிட்டிவ் – சீனாவில் மீண்டும் கொரோனாவா?

இதனால் அங்கு 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு முடிவெடுத்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓரிரு நாளில் முடிக்கும் அளவுக்கு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவில் தற்போதைய கொரோனா மொத்த பாதிப்பு 85,810. அவர்களில் 80,911 பேர் குணமடைந்து விட்டனர். 4,634 பேர் இறந்துவிட்டனர்.