“கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3வது அலை வந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். 33 குழந்தைகள் டெல்டா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்.

“கொரோனா 3-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் நினைத்து கொள்ள வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனா மூன்றாவது அலை வந்தால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் . அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.