கொரோனா 3வது அலை: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை!

 

கொரோனா 3வது அலை: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை!

கொரானா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வெளிமாநில, வெளியூர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுலா பயணிகள் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா 3வது அலை: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை!

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வெளிமாநில, வெளியூர் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுலா பயணிகள் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தவிர பிற நாட்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது RTPCR பரிசோதனை செய்து அதில், கொரானா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருப்பவர்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என்றும்
ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இருப்பிட விலாசத்திற்காக ஆதார் அல்லது குடும்ப அட்டை , ஸ்மார்ட் கார்டில் ஏதாவது ஒன்றினை காட்டினால் மட்டுமே ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் வரும் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தை வரும் சனிக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.