கொரோனா 3வது அலை : ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

 

கொரோனா 3வது அலை : ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா 3வது அலை : ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நாளை காலை 6 மணியுடன் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் ,பொழுதுபோக்கு ,விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள் ,நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள் ,உயிரியல் பூங்காவுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் 50 நபர்கள், இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலை : ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

இந்த சூழலில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக, தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது தெரிகிறது