“கொரோனா அடுத்த அலை ” பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

“கொரோனா அடுத்த அலை ” பாதுகாப்பாக இருக்க  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசியை விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா அடுத்த அலை ” பாதுகாப்பாக இருக்க  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் நாளொன்றுக்கு 15 என்ற அளவில் தொற்று பாதிப்பு உள்ளது. பூஜ்யத்தை நோக்கி செல்வதே இலக்கு. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை திட்டமிடப்பட்டுள்ளது. கோவிட் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடப்படும்.

“கொரோனா அடுத்த அலை ” பாதுகாப்பாக இருக்க  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

கொரோனா அடுத்த அலை வராமல் தடுக்க அடுத்து வரும் 2 மாதங்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசியை விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும். தடுப்பூசி என்பது மிக முக்கியமான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்” என்றார்.

“கொரோனா அடுத்த அலை ” பாதுகாப்பாக இருக்க  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் போடப்படுகிறது. சுகாதார மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடலாம்; போடப்படும். கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.