‘வாந்தியும்…வயிற்றுப்போக்கும்’ கொரோனா 2 ஆம் அலையின் அறிகுறிகள்!

 

‘வாந்தியும்…வயிற்றுப்போக்கும்’ கொரோனா 2 ஆம் அலையின் அறிகுறிகள்!

கொரோனா இரண்டாவது அலையில் கடந்தமுறை இருந்ததைவிட வயிற்றுப்போக்கும், வாந்தியும் அதிகமாக உள்ளது என்று ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

‘வாந்தியும்…வயிற்றுப்போக்கும்’ கொரோனா 2 ஆம் அலையின் அறிகுறிகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கொரோனா குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார். அதில், “கொரோனா மீண்டும் பரவுவதற்கான காரணம் மக்களிடம் அது குறித்த பயம் குறைந்து விட்டது. முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல், மக்கள் விதிமுறைகளை அலட்சியப்படுத்தியதால் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது .குறிப்பாக திருமணம், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் தொற்று பரவ வேகமாக கூடிவருகிறது. இதனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பெரும்பாலான மக்கள் தவிர்ப்பது நல்லது” என்றார்.

‘வாந்தியும்…வயிற்றுப்போக்கும்’ கொரோனா 2 ஆம் அலையின் அறிகுறிகள்!

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் கடந்தமுறை இருந்ததைவிட வயிற்றுப்போக்கும், வாந்தியும் அதிகமாக உள்ளது .அதனால் சிகிச்சை முறையில் சற்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாதிப்பு குறைந்து காணப்படுகிறது .அதேசமயம் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், இணை நோய்கள் உள்ளவருக்கும் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. தடுப்பூசி இருப்பதால் அதுகுறித்து நாம் பயப்பட தேவையில்லை” என்றும் “தடுப்பூசி நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அதனால் தயக்கமின்றி கொரோனா வார்டில் நடமாட முடிகிறது. எனவே தடுப்பூசி பற்றி மக்கள் தவறான வதந்திகளை பரப்புவது நமக்கு தான் ஆபத்து” என்றார்.