முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா உறுதி!

 

முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் தினசரி கொரனோ பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலை நேற்று வெளியிட்டிருந்தது. பாதிப்பு அதிகமாக இருக்கும் தமிழகம் உட்பட 9 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா உறுதி!

அப்போது முதல்வர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனை வழங்கி நிலையில், அவரது அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தமிழகத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், மதுரை வின்சென்ட் நகரில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் முதியோர் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர்களுக்கு காப்பகத்திலேயே சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.