கொரானாவால் தப்பித்து ஓடும் மக்கள் -பணம் சம்பாதிக்கும் பஸ் உரிமையாளர்கள்- புது மோசடி அம்பலம்

கொரானாவால் தப்பித்து ஓடும் மக்கள் -பணம் சம்பாதிக்கும் பஸ் உரிமையாளர்கள்- புது மோசடி அம்பலம்

போலியான கொரானா நெகடிவ் சேட்டிபிகேட்டுடன் சென்ற ஒரு பஸ்சிலிருந்த பயணிகள் மற்றும் பலரை போலீசார் கைது செய்தனர்

கொரானாவால் தப்பித்து ஓடும் மக்கள் -பணம் சம்பாதிக்கும் பஸ் உரிமையாளர்கள்- புது மோசடி அம்பலம்

மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடுமையாக பரவி வருகிறது .அதனால் குஜராத் அரசு மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்கள் ,கோவிட் எதிர்மறை சர்ட்டிபிகேட் கொண்டு வருவதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேற முயற்சிப்பதால், பஸ் ஆபரேட்டர்கள்,இதை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக அனைத்து விதமான மோசடியான வேலைகளையும் செய்கிறார்கள்
பொது மக்கள் பீதியில் மகாராஷ்டிராவிலிருந்து வெளியேறும்போது, ​​பயண முகவர்கள் போலியான கோவிட்-எதிர்மறை சான்றிதழை ரூ .300 முதல் ரூ .500 வரை வாங்கிக்கொண்டு ஏற்பாடு செய்கிறார்கள்.அப்படி போலியான கொரானா சர்டிபிகேட்டுடன் 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சூரத்துக்கு போனது .இது பற்றி போலீசுக்கு தகவல் போனது .அதனால் செவ்வாய்க்கிழமை காவல்துறையினரால் அந்த பஸ் கைப்பற்றப்பட்டது .
அப்போது போலீசாரின் சோதனையில் மூன்று ஆய்வகங்கள் வழங்கிய போலி ஆர்டி-பிசிஆர் அறிக்கைகள் சிக்கியது . அப்போது பயணிகள் தங்களுக்கு போலி சான்றிதழ்கள் கொடுக்க ஒவ்வொருவரிடமும் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகக் கூறினர்,
பின்னர் போலி கோவிட் எதிர்மறை சான்றிதழ்களுடன் சூரத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் உரிமையாளர், இரண்டு ஓட்டுநர்கள், ஒரு கிளீனர் மற்றும் இரண்டு முகவர்கள் உட்பட 38 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொரானாவால் தப்பித்து ஓடும் மக்கள் -பணம் சம்பாதிக்கும் பஸ் உரிமையாளர்கள்- புது மோசடி அம்பலம்