“சுறாவை புறா போல் பிடித்த போலீஸ்” சுறாமீனிடம் சிக்கவிருந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் -ஊடகத்தில் வைரலாகும் வீடியோ..

“சுறாவை புறா போல் பிடித்த போலீஸ்” சுறாமீனிடம் சிக்கவிருந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் -ஊடகத்தில் வைரலாகும் வீடியோ..

அமெரிக்காவின் பிளோரிடாவில் உள்ள கோகோ பீச்சில் சுறாமீனிடம் சிக்கி இறையாகவிருந்த ஒரு சிறுவனை ஒரு காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது .

“சுறாவை புறா போல் பிடித்த போலீஸ்” சுறாமீனிடம் சிக்கவிருந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் -ஊடகத்தில் வைரலாகும் வீடியோ..

அமெரிக்காவின் பிளோரிடாவில் அட்ரியன் கோசிகி என்ற போலீஸ் அதிகாரி கோகோ கடற்கரையில் தனது மனைவியுடன் ஒரு ஓய்வு நேரத்தை ஜாலியாக அனுபவித்துக்கொண்டிருந்தார். அப்போது கடற்கரையின் அருகே ஒரு சுறாமீன் ஒன்று நெருங்கி வருவதை அந்த ஜோடி பார்த்தது.

“சுறாவை புறா போல் பிடித்த போலீஸ்” சுறாமீனிடம் சிக்கவிருந்த சிறுவனை காப்பாற்றிய போலீஸ் -ஊடகத்தில் வைரலாகும் வீடியோ..அவர்கள் அந்த சுறா மீனைப் பார்த்தவுடன், கடற்கரையின் அருகில் நின்றவாறே ஒரு சிறுவன் அதை ரசிப்பதைக் கவனித்தார்கள். சுறா இருந்த இடத்திற்கும் சிறுவன் இருந்த இடத்திற்கும் தூரம் அதிகமில்லை .ஆனால் சுறாவைப்பற்றிய எந்த பயமும் இல்லாமல் சுறா வருவதை அவன் ரசித்தான் .ஏனென்றால் சுறாமீன் என்ன செய்யும் என்று அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அப்போது அசம்பாவிதமாக எதுவும் நடக்குமுன், போலிஸ் அதிகாரி கோசிகி உடனே தண்ணீரில் குதித்தார், சுறாவின் தாடைகளுக்கு அடியில் சிக்கிய அந்த சிறுவனை பாதுகாப்பாக வெளியே இழுத்து கரைக்கு அழைத்து வந்தார்.
அந்த வீடியோ வெளியிடப்பட்டவுடன் சமூக ஊடகத்தில் வைரலாகியது. இது பேஸ்புக்கில் மட்டும் 97,000 லைக்குகளைப் பெற்றது.