சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட காவலர் வி.எஸ்.உமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த பின்னர் தான் இந்தக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வசித்துவரும் குடியிருப்பின் முதல் தளத்தில் அந்தக் காவலர் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருந்த பொழுது உமேஷ் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமி இந்த சம்பவத்தைப் பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக் காவலர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை நாங்கள் கைது செய்ய வேண்டியிருந்தது. அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவம் நடந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். எங்கள் துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Most Popular

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...
Do NOT follow this link or you will be banned from the site!