பணம் தர முடியாது என விரட்டிய வங்கி ஊழியர்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி! – புதுச்சேரியில் அதிர்ச்சி

 

பணம் தர முடியாது என விரட்டிய வங்கி ஊழியர்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி! – புதுச்சேரியில் அதிர்ச்சி

டெபாசிட் செய்த பணத்தைத் திரும்பத் தர முடியாது என்று கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் விரட்டியதால் மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த பொறையார் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கிருஷ்ணவேணி, அங்குள்ள பொறையார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கி சிறுக சிறுக சேமித்த பணத்தை எல்லாம் டெபாசிட் செய்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்து, பேப்பர், குப்பைகளில் உள்ள பொருட்களை சேகரித்து அதை விற்று கிடைத்த பணத்தை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். இப்படி அவர் கணக்கில் ரூ.10,500 உள்ளதாக கூறப்படுகிறது.

பணம் தர முடியாது என விரட்டிய வங்கி ஊழியர்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி! – புதுச்சேரியில் அதிர்ச்சிகொரோனா காரணமாக முன்பு போல் வெளியே நடமாட முடியாத நிலையில், தான் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கி ஊழியர்கள் நாளை வாருங்கள் என்று கூறி அலைகழித்துள்ளனர். பல முறை வங்கிக்கு சென்றும் இதே பதில் வரவே, தன்னுடைய பேரனை அழைத்துக்கொண்டு கடந்த 9ம் தேதி அவர் வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போதும் வங்கி ஊழியர்கள் பணம் இல்லை, நாளை வாருங்கள் என்று கூறியுள்ளனர். ஏன் என்று விசாரித்தபோது பதில் சொல்ல முடியாது. எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்துகொள் என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அந்த பாட்டி கண்ணீர்விட்டு அழுதார். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பணம் தர முடியாது என விரட்டிய வங்கி ஊழியர்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி! – புதுச்சேரியில் அதிர்ச்சிகொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் நகையை அடமானம் வைத்து பணத்தைப் பெற்று சென்றுவிட்டனர். ஊரடங்கு காரணமாக யாரும் வட்டியும் செலுத்தவில்லை, பணத்தைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை. இதனால், வங்கியில் போதுமான பணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்காக மூதாட்டியை அலைக்கழிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் வங்கிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.