‘லூஸில்’ சமையல் எண்ணெய் விற்க இடைக்காலத் தடை!

 

‘லூஸில்’ சமையல் எண்ணெய் விற்க இடைக்காலத் தடை!

பேக்கிங் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய்களை விற்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

‘லூஸில்’ சமையல் எண்ணெய் விற்க இடைக்காலத் தடை!

உணவு பாதுகாப்பு விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதால் கல்லீரல் மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘லூஸில்’ சமையல் எண்ணெய் விற்க இடைக்காலத் தடை!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2011ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது ? எண்ணெய் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன? கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெய் தரம் குறித்து எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், பேக்கிங் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய்களை விற்க இடைக்கால விதித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.