’அதிபரே இப்படிச் செய்யலாமா?’ பிரேசில் நாட்டின் சுதந்திர தின விழாவில் சர்ச்சை

 

’அதிபரே இப்படிச் செய்யலாமா?’ பிரேசில் நாட்டின் சுதந்திர தின விழாவில் சர்ச்சை

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று.  உலகளவில் இரண்டாம் இடத்தில் இருந்த பிரேசிலை சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா முந்திச் சென்றது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 74 லட்சத்து  89 ஆயிரத்து 116 பேர்.    பிரேசிலில் பாதிப்பு 41,47,794 பேர்.

உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 865 பேர்.  பிரேசிலில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர். அதாவது உலகளவில் இறந்தவர்களில் எட்டு பேரில் ஒருவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.  

’அதிபரே இப்படிச் செய்யலாமா?’ பிரேசில் நாட்டின் சுதந்திர தின விழாவில் சர்ச்சை

நேற்று மட்டுமே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய கொரோனா நோயாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு கடுமையான பாதிப்புள்ள நாட்டில் ஒவ்வொருவரும் சுய பாதுகாப்போடு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும். இல்லையெனில், மேலும் அதிகளவில் பரவவே வாய்ப்பிருக்கிறது.

பிரேசில் நாட்டு அதிபர் ஜயிர் எம். போல்சோன்ரா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்ச்சையால் குணமடைந்தவர். இந்நிலையில் நேற்று நடந்த அந்நாட்டு விடுதலை தின விழாவில் அதிபர் போல்சோன்ரா மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டிருக்கிறார்.

’அதிபரே இப்படிச் செய்யலாமா?’ பிரேசில் நாட்டின் சுதந்திர தின விழாவில் சர்ச்சை

நாட்டு மக்களை மாஸ்க் அணிய கட்டாயப்ப்படுத்தும் சூழலில் பிரதமர் இப்படிச் செய்யலாமா… என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.  பொதுவெளியில் அதிபர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவரின் உடல்நலத்துக்கு ஆபத்து என்பதோடு, நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியவரே இப்படிச் செய்கிறார் என்ற பேச்சும் வரும் என்று விவாதிக்கப்படுகிறது.