’தமிழ் எம்.பி பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா?’ இலங்கையில் சர்ச்சை

 

’தமிழ் எம்.பி பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா?’ இலங்கையில் சர்ச்சை

இலங்கையில் கொரோனா பேரிடர் கால இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டு, ராஜபக்‌ஷே கட்சியின் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

’தமிழ் எம்.பி பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா?’ இலங்கையில் சர்ச்சை

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ் எம்பி விக்னேஸ்ரவன் இம்மாதம் 20-ம் தேதி பேசினார்.

அவரின் பேச்சின் தொடக்கமே, ‘உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களிம் மொழி தமிழ்’ என்பதாகப் பேசினார்.

’தமிழ் எம்.பி பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா?’ இலங்கையில் சர்ச்சை

இந்தப் பேச்சுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் இறையாண்மையை காப்பாற்றுவேன் என சத்தியம் செய்துவிட்டு, பிரிவினை பேசுவதா. நாட்டின் பூர்வீக குடிமக்கள் யார் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது சபை குறிப்பில் இடம்பெறுவதா? என்று ஆட்சேபனை தெரிவித்தார். எம்.பி விக்னேஸ்வரன் கருத்தை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தப் பிரச்சினை இலங்கையில் பேசுபொருளாக மாறியது. இந்தப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ’பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் கருத்துகள் பாராளுமன்ற ஹென்சாட் அறிக்கையில் பதிவாகியுள்ளது. அதை நீக்க கோர யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல விக்னேஸ்வரன் கருத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என்றில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.