“பெரியார் சிலைக்கு காவி துண்டு” : மீண்டும் சர்ச்சை!

 

“பெரியார் சிலைக்கு காவி துண்டு” : மீண்டும் சர்ச்சை!

ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

“பெரியார் சிலைக்கு காவி துண்டு” : மீண்டும் சர்ச்சை!

சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலை தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவமதிக்கப்பட்டு வருகிறது. பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என விஷமிகள் சிலர் தொடர்ந்து விஷம செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் , கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர், திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு என பல செய்திகளை நாம் கண்டு விட்டோம். ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றன.

“பெரியார் சிலைக்கு காவி துண்டு” : மீண்டும் சர்ச்சை!

அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் தஞ்சையில் நடைபெற்றுள்ளது. தஞ்சை ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை உண்டாகியுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக பெரியார் சிலையை அவமரியாதை செய்வதை கண்டித்த தமிழக அரசு, குற்றச் செயலில் ஈடுபடும் சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.