மோடி குறித்து சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்ட உதயநிதி!

 

மோடி குறித்து சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்ட உதயநிதி!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு வந்தவன் நான் அல்ல. குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தது பிரதமர் மோடி தான்.

மோடி குறித்து சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்ட உதயநிதி!

குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி பல மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோரின் ஓரங்கட்டிவிட்டு தான் முன்னுக்கு வந்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் .அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லை தாங்காமல் தான் இறந்துவிட்டனர்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த பாஜக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்தனர். இது குறித்து விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இன்று மாலைக்குள் விளக்கமளிக்கவில்லை என்றால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்திருந்தது.

மோடி குறித்து சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கேட்ட உதயநிதி!

தற்போது உதயநிதி ஸ்டாலின் அந்த நோட்டிஸுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதில் கடிதத்தில், “கடந்த மார்ச் 31ஆம் தேதி தாராபுரத்தில் நான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை” என்று கூறியுள்ளார்.