சாக்கடை நீர் என்று குருமூர்த்தி சொன்னது யாரை?

 

சாக்கடை நீர் என்று குருமூர்த்தி சொன்னது யாரை?

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பாஜகவின் மூத்த தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். இந்த விழாவுக்குத்தான் அமித் ஷா வருவதாக இருந்தது. பிறகு அதில் மாற்றம் செய்யப்பட்டு நட்டா வந்தார்.

நேற்றைய விழாவில் ஒரு வாசகர் திமுகவை விலக்க பாஜக என்ன செயற்திட்டம் வைத்திருக்கிறது என்பதாகக் கேள்வி கேட்டார்.

சாக்கடை நீர் என்று குருமூர்த்தி சொன்னது யாரை?

அது தொடர்பாக பதில் அளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, “1987 -88 ஆம் ஆண்டுகளில் போர்பஸ் ஊழல் வந்தபோது ராஜிவ் காந்தியை பதவியிலிருந்து விலக்க அருண்சோரி உள்ளிட்டோர் நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். அதில் ஒன்று சந்திராசாமியைப் பயன்படுத்தியது. ஏனெனில், அவர் மீது பல புகார்கள் இருந்தாலும் ராஜிவ் காந்தி மீது அவரிடம் சில முக்கிய செய்திகள் இருந்தன.

இது குறித்து அருண்சோரியிடம், “ ஊழலை எதிர்த்து போராடும் நீங்கள் எப்படி சந்திராசாமியுடன் இணைந்து வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அப்போது அதற்கு அவர் “வீடு பற்றி எரியும்போது கங்கை நீர் வரட்டும் எனக் காத்திருக்கக்கூடாது. சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும்” என்றார். இதையே நான் திமுகவை விலக்குவதற்கான பதிலாகச் சொல்கிறேன். அப்படித்தான் சசிகலாவாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி. வீட்டை அணைக்க கங்கை நீருக்காகக் காத்திருக்க முடியாது” என்று பேசினார்.

சாக்கடை நீர் என்று குருமூர்த்தி சொன்னது யாரை?

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குருமூர்த்தி சாக்கடை நீர் என்று சொல்வது யார் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர். அவர் பேச்சில் நேரடியாக சசிகலாவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும், ’ சசிகலாவாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி’ என்றும் சொல்லியிருப்பதால் ’வேறு யாராக’ என்று சொல்வது யார் யாரை என்றும் பலருக்கும் சந்தேகங்கள் எழுகின்றன.

அவரின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார். இந்த விவகாரம் இன்னும் பல மட்டங்களில் சூடு பிடிக்கும் என்றே தெரிகிறது. சசிகலா – அதிமுக இணைப்பை சாத்தியமாக்குமா… இல்லை இதனால் இருவரும் இணைய முடியாமலே போய்விடுமா என்பதும் இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.