சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் – இந்திய அணி வெற்றிக்கு பின்னடைவா?

 

சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் – இந்திய அணி வெற்றிக்கு பின்னடைவா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே முதலில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்த, டி20 போட்டித் தொடரை 2:0 எனும் கணக்கில் இந்திய அணி வென்றது. இதில் தமிழகத்தின் நடராஜன் தனித்து வெளிப்பட்டார்.

சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் – இந்திய அணி வெற்றிக்கு பின்னடைவா?

தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டை ஆஸ்திரேலியாவும், இரண்டாம் டெஸ்ட்டை இந்தியாவும் வென்றிருக்கிறது. இரண்டாம் போட்டியில் தலைமையேற்ற ரஹானே அசத்தலான ஆட்டத்தையும் நேர்த்தியான கேப்டன்ஷிப்பை அளித்தார். அதுவே அந்தப் போட்டியில் வெல்ல உதவியது. மூன்றாம் போட்டியில் ரோஹித் ஷர்மா, தமிழகத்தின் நடராஜன் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனால், இந்தியா – ஆஸ்திரேலியா வீரர்கள் கடும் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் – இந்திய அணி வெற்றிக்கு பின்னடைவா?

ஆனால், அவற்றையும் மீறி ரோஹித் ஷர்மா, சுப்னம் கில், ப்ரித்தீவ் ஷா, சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் வெளியே ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ரசிகர்கள் அவர்களைச் சந்தித்த படங்கள் வெளியாகின.

வீரர்கள் சாப்பிட்ட உணவுக்கு ரசிகர்கள் பணம் தந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையிலிருந்து விதிகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தனிமைப்படுத்தல் காலம் என்பது எத்தனை நாட்கள் என தெளிவாகக் குறிப்பிட வில்லை.

சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் – இந்திய அணி வெற்றிக்கு பின்னடைவா?

தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்கள் எனில் இந்த ஐந்து வீரர்களும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுவது சாத்தியம் இல்லாமல் போய்விடும். ஏனெனில், 7 மற்றும் 15 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இன்று தனிமை காலம் தொடங்கினாலும், 16-ம் தேதிதான் முடிவடையும். ஒருவேளை 7 நாள் தனிமைப்படுத்தப்பட்டால் முதல் டெஸ்ட்டில் ஆட முடியாது.

இதனால், அடுத்த போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் ரோஹித், கில், ரிஷப் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாதது பெரும் இழப்பாக அமைந்துவிடும்.

ஆயினும் இந்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை 3 நாட்களில் தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தால் மட்டுமே அனைவரும் அடுத்த போட்டியில் ஆட முடியும்.