’அணுசக்தி யுத்தம் நடத்துவோம்’ பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து

 

’அணுசக்தி யுத்தம் நடத்துவோம்’ பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து

இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளிடையே விடுதலை காலத்திற்கு முன்பிருந்தே பிரச்னை இருந்து வருகிறது. அவ்வப்போது எல்லையில் அத்துமீறல் நடக்கும்போதெல்லாம் ராணுவ நடவடிக்கை நடத்துவது வழக்கம்.

கடந்த 70 ஆண்டு காலமாக, இம்மாதிரியான ராணுவ நடவடிக்கையில் இருநாட்டு வீரர்களிலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் இருதரப்பில் நடத்தப்பட்டாலும் இன்னும் சுமூக உறவு ஏற்பட வில்லை. முக்கியமாக காஷ்மீர் தொடர்பான பிரச்னைதான் பிரதானமாக இருக்கிறது.

’அணுசக்தி யுத்தம் நடத்துவோம்’ பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து

இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கர தாக்குதல்களுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுவார்கள்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் மத்திய அமைச்சர் ஷேக் ரஷீத் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் வழக்கமான போர் முறையில் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதனால் எங்களின் யுத்தம் அணுசக்தி யுத்தமாக இருக்கும்’ என்பதாகப் பேசியிருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பேச்சு இருநாட்டின் நல்லுறவை சீர்குலைப்பதாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.