ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், நிலுவை தொகை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

 

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், நிலுவை தொகை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான டெண்டர் தொகையை வழஙகக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தை, அரசு ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுளில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த 7 மாதங்களாக வழங்க வேண்டிய 65 கோடி ரூபாய் டெண்டர் தொகையை, போதிய நிதிஇல்லை என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் வழங்காததாக கூறப்படுகிறது.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், நிலுவை தொகை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

இந்த நிலையில் நிலுவை டெண்டர் தொகையை உடனடியாக வழங்கக்கோரி, ஆவடி மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்ததார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டெண்டர் தொகையை வழங்காததால் பல்வேறு இடங்களில் பணிகள் முடங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய ஒப்பந்ததாரர்கள், டெண்டர் தொகையை வழங்காமல் தாமதம் செய்வதாக மாநகராட்சி கணக்காளருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இருப்பதாக தெரிவித்த அவர்கள், டெண்டர் தொகை வழங்காவிட்டால் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.