தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தினசரி தூய்மை பணியாளர்கள், லாரி, டிராக்டர் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் குப்பை சேகரித்து வருகிறார்கள். இந்த குப்பை ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் வைராபாளையம் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

வீடுகள், ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கப்பட்டாலும், குப்பை கிடங்குகளில் இந்த குப்பை மீண்டும் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையில் 80 டன் அளவுக்கு மக்காத குப்பை பொருட்கள் கிடைக்கின்றன. இந்த குப்பையை தூய்மை பணியாளர்கள் தனித்தனியாக பிரித்து மறு சுழற்சி பொருட்களை தனியாகவும், மின்னணு கழிவு பொருட்களை தனியாகவும் சேகரித்து வைக்கிறார்கள்.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

தினசரி சுமார் 80 டன் குப்பையை பிரிக்கும்போது மறு சுழற்சி பொருட்களான பிளாஸ்டிக், இரும்பு, காகித அட்டை உள்ளிட்ட பொருட்கள் சுமார் 6 டன் அளவுக்கு கிடைக்கிறது. இந்த பொருட்கள் தினசரி பழைய பொருட்கள் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. குப்பை சேகரித்து அதை பிரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்கிறார்கள்.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

இதுமட்டுமின்றி மின்னணு கழிவு பொருட்களான தொலைக்காட்சி பெட்டிகள், கணினி உதிரி பாகங்கள், செல்போன்கள், சார்ஜர்கள், ரிமோட் உள்ளிட்ட பொருட்கள் இதுவரை முறைப்படுத்தப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஈரோடு மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளன.

அதன்படி இந்த நிறுவனம் மாதம் தோறும் ஈரோடு மாநகராட்சியில் குவியும் மின்னணு கழிவுகளை வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது கடந்த ஒரு மாதமாக ஈரோடு மாநகராட்சியில் சுமார் 2 டன் அளவுக்கு மின்னணு கழிவுகள் சேகரித்து குவிக்கப்பட்டு உள்ளன. தினசரி சுமார் 6 டன் மறுசுழற்சி கழிவுகள் தவிர்த்து சுமார் 74 டன் அளவுக்கு மீண்டும் பயன்படுத்த முடியாத குப்பை சேருகிறது. இதனால் குப்பை மேடுகள் விரிவடையும் நிலை ஏற்படுகிறது. எனவே வெப்ப ஆற்றலை பயன்படுத்தி மக்காத பொருட்களை அழிக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஈரோடு வைராபாளையம் குப்பை கிடங்கில் 25 டன் மற்றும் 10 டன் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட உரம் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடங்கப்பட உள்ளன. இதுபோல்

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகளை உரமாக்கும் திட்டம்

வெண்டிபாளையத்திலும் 10 டன் கொள்ளளவு கொண்ட உரம் தயாரிக்கும் அலகு தொடங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த திட்டத்துக்கான ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இருக்கிறது. விரைவில் வைராபாளையத்தில் பணிகள் தொடங்க இருக்கின்றன. அதுமட்டுமின்றி, வைராபாளையம் காவிரி ஆற்றையொட்டி குப்பை போடப்பட்டு குப்பை மேடாக இருந்த பகுதி, தற்போது தூய்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா மற்றும் நடைபயிற்சி பகுதி விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.