இன்சூரன்ஸ் பணத்திற்காக ரவுடிகளை வைத்து தன்னையே கொலை செய்துகொண்ட தொழிலதிபர் !

 

இன்சூரன்ஸ் பணத்திற்காக ரவுடிகளை வைத்து தன்னையே கொலை செய்துகொண்ட தொழிலதிபர் !

நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாத டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர், தனது குடும்பத்திற்க்கு ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதற்காக தனது மரணத்திற்கு தானே திட்டம் போட்டுள்ளார்.

டெல்லி ஐபி எஸ்ட்டென்ஷன் பகுதியின் ஆர்யா நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த கவுரவ் பன்சால் (40), ஒரு ரேஷன் கடை நடத்தி வந்தார். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த பன்சால் தன்னைக் கொல்ல, ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரை வேலைக்கு அமர்த்தினார்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக ரவுடிகளை வைத்து தன்னையே கொலை செய்துகொண்ட தொழிலதிபர் !

போலீஸ் விசாரணையின்படி, பன்சால் முதலில் தற்கொலை செய்ய விரும்பினார், ஆனால் அவ்வாறு செய்ய தைரியம் வரவில்லை. பின்னர் அவர் தனது சொந்தக் கொலையைத் திட்டமிட்டு, கர்தூமா கிராமத்தில் ஒரு சிறுவன் உட்பட நான்கு கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தினார். பன்சால் இந்த திட்டத்திற்க்காக அந்த கும்பலுக்கு ரூ. 90000 வழங்கியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் அவரை சுட திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஒரு ஆயுத வியாபாரி சிறுவர்களிடம் கைத்துப்பாக்கியை விற்க மறுத்துவிட்டார்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக ரவுடிகளை வைத்து தன்னையே கொலை செய்துகொண்ட தொழிலதிபர் !

கொலை செய்ய திட்டமிட்ட நாளில், பன்சால் மோகன் கார்டனுக்குச் சென்று, அவர் கொல்லப்பட வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் உடலைக் கயிறால் கட்டிவிட்டு ஆதார் கார்டை அருகில் போட்டுவிடுமாறு கூறியுள்ளார். கவுரவின் உடல் கயிறால் கட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதையடுத்து கொலை செய்தவர்கள் பிடிபட்டவுடன், ​​இறந்தவர் தனது சொந்த கொலைக்கு பணம் செலுத்தியதாகத்தெரியவந்தது. தான் இறந்தால் தனது குடும்பத்திற்கு காப்பீட்டு பணம் கிடைக்கும் என்று அவர்களிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.