நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்…

 

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்…

தேனி

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்…

கொரோனா காரணமாக அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இதனிடையே, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், பட்டத்திக்குளம், போடாங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் நெல் மற்றும் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.