Home அரசியல் தொடரும் நாடகம் – ஆதரவு கிடைக்காததால் படு அப்செட்டில் பன்னீர்

தொடரும் நாடகம் – ஆதரவு கிடைக்காததால் படு அப்செட்டில் பன்னீர்

அதிமுகவில் ஏதோ பிரளயம் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க படாத பாடுபட்டுவரும் துணை முதல்வர் பன்னீர் தரப்பு, கிடைத்த முடிவுகளால் படு அப்செட் ஆகி இப்போது மூலையில் சுருண்டு கிடக்கிறது.
கள எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமலும், கட்சித் தொண்டர்களின் மனநிலையை அறிந்துகொள்ளாமலும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை பன்னீர் கையாள்வதாக அவருக்கு நெருக்கமானவர்களே குற்றம்

சாட்டுகின்றனர். 2017ல் அதிமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்து நம்பிக்கை துரோகம் செய்தபோதே மிச்ச சொச்சமிருந்த தொண்டர்களின் ஆதரவை இழந்தார் பன்னீர். தன்னை, தனது குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதால் ‘தர்மயுத்தம்’ காலத்தில் உடனிருந்த கட்சி நிர்வாகிகளின் அபிமானத்தையும் இழந்தார்.
அதேநேரம் இந்த இரு தரப்பினரின் ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்பார்த்ததற்கும் அதிகமாகக் கிடைத்து வருகிறது.

எடப்பாடிக்கான ஆதரவு தளத்தில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு பன்னீர் அரங்கேற்றிவரும் நாடகங்கள் சுத்தமாக எடுபடவில்லை.
கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அண்மையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அவர், தனது வீட்டிலேயே முடங்கிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை என செய்திகள் பரப்பப்பட்டன. தகவலறிந்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது வீட்டின் முன்பாக திரளுவார்கள் என கணக்குப் போட்டது பன்னீர் தரப்பு. ஆனால் அது முழுக்க தப்புக்கணக்காகிவிட்டது.


கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வைத்தியலிங்கம், அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் ஒப்புக்கு வந்துபோனதோடு சரி. அப்புறம் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கூலிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சின்னக் கூட்டம் பன்னீர் வீட்டின் முன்பு நின்றபடி சத்தமிட்டுக் கொண்டிருந்தது. மற்றபடி தர்மயுத்த காலத்தில் திரண்ட கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை.


என்ன ஆச்சிது பன்னீருக்கு? ஏன் இந்த சறுக்கல்?
நம்மிடம் பேசிய ஒரு காலத்தில் அவருக்கு மிக நெருக்கமாக இருந்த மூத்த நிர்வாகி ஒருவர்,’’ கட்சிக்குள் தனக்கிருந்த பிடி இப்போது தளர்ந்து போயிருப்பது பன்னீருக்கு நன்றாகவே தெரிகிறது. இதை சரி செய்யும் நோக்கத்துடனே அவர் கடந்த சில நாட்களாக இந்த மாதிரியான நாடகங்களை நடத்தி வருகிறார். உச்சபட்சமாக துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் கொளுத்திப் போட்டார். ஆனால் இதெல்லாம் தொண்டர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அத்துடன் ஒரு காலத்தில் பன்னீருடன் இருந்த என்னைப் போன்ற நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் இப்போது அவருடன் இல்லை. இந்த நிதர்சனத்தை புரிந்துகொள்ளாமல் அவர் முரண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை.


அதேநேரம் எதிர் தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் மிகப் பரவலாக நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டு பன்னீர் அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதை மீறி செயல்பட்டால் இழப்பு அவருக்குத்தான்’’ என்றார் உறுதியான குரலில்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“இவர்கள் நல்ல தமிழ்த்தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை” : இயக்குநர் அமீர் கண்டனம்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளை தவறாகப் பேசியும் மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்று இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்றுதான்....

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

“ரொம்ப குடிக்கிறாரு; நான் தோத்து போய்ட்டேன்” : நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் வீடியோ !

குடிக்கு அடிமையாக உள்ள பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரின்...
Do NOT follow this link or you will be banned from the site!