அசுர வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் இருமடங்கு அதிகரிப்பு!

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் இருமடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. ஆனால், மக்களின் அலட்சியத்தால் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது. மீண்டும் லாக்டவுன் போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் இருமடங்கு அதிகரிப்பு!

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் மட்டுமே 2,105 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு புதிதாக பதிவாகும் பாதிப்பில் 40% சென்னையிலேயே இருக்கிறது. இதனால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய சென்னை மாநகராட்சி பாதிப்புகள் அதிகமாக இருக்கும் தெருக்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து மக்கள் அங்கு செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் இருமடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் மொத்தமாக இருக்கும் 1,309 கட்டுப்பாட்டு பகுதிகளில் சென்னையில் மட்டும் 1,119 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 600 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 212, ராயபுரம் மண்டலத்தில் 167, கோடம்பாக்கத்தில் 105 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அதே போல அடையாறு, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களிலும் பாதிப்புகள் அதிகமாக உள்ளது.அசுர வேகத்தில் பரவும் கொரோனா… சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் இருமடங்கு அதிகரிப்பு!