கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 56 ஆக குறைந்தது!

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 56 ஆக குறைந்தது!

தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் 56 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான அளவில் இருந்தது. இதனால் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் கொரோனா குறையத் தொடங்கியது. தற்போது, 800 என்ற அளவில் தினசரி கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிபடியாக குறைந்துவருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 56 ஆக குறைந்தது!

அதிக அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாலும், புதிதாக நோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்படுவது குறைந்ததாலும் கட்டுப்பாட்டு பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களுக்கு இந்த விதிவிலக்கு. அதாவது 16 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, தேனி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் உள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள மொத்தம் 56 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. அங்கும் நிலைமை விரைவில் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.